வரி குறைப்பு; அமெரிக்காவிடமிருந்து $50 பி. பொருட்களை சீனா வாங்குகிறது

வாஷிங்டன்: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் சில வரிகளை குறைக்கவும் அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளதால் அதற்கு கை மாறாக அமெரிக்காவிடமிருந்து ஐம்பது பில்லியன் டாலர் மதிப்புள்ள பண்ணைப் பொருட்களை வாங்க சீனா முன் வந்துள்ளது.

சீனாவின் இந்த முடிவு, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடை யிலான வர்த்தகப் பதற்றத்தைத் தணிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

சீனாவின் 160 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு வரி கூட்டுவதை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதாகவும் அந்தப் பொருட் களுக்கு பழைய வரியே நீடிக்கும் என்றும் இரு தரப்பு பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்குப் பதிலாக பெய்ஜிங் அமெரிக்காவிடமிருந்து 50 பில்லியன் டாலர் மதிப்புள்ள பண்ணைப் பொருட்களை 2020ல் வாங்க ஒப்புக் கொண்டுள்ளது.

இது, 2017ல் அமெரிக்காவிடமிருந்து சீனா வாங்கிய பண்ணைப் பொருட்களுடன் ஒப்பிடுகையில் இரு மடங்காகும்.

ஆனால் வெள்ளை மாளிகையோ பெய்ஜிங்கோ இதுவரை எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இருந்தாலும் இரு நாடுகளுக்கு இடையிலான புதிய உடன்பாடு நிதிச் சந்தைகளுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக் கிழமை அன்று பெரும்பாலான பங்குகளின் விலைகள் ஏற்றம் கண்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!