வட கொரியரை அமெரிக்காவுக்கு நாடுகடத்த மலேசிய நீதிமன்றம் அனுமதி

வட கொரியரை அமெரிக்காவுக்கு நாடுகடத்த மலேசிய நீதிமன்றம் அனுமதி

1 mins read

கோலாலம்பூர்: அமெரிக்காவில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்றச்சாட்டை எதிர்நோக்கும் வடகொரியரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த மலேசிய நீதிமன்றம் நேற்று அனுமதியளித்தது.

ஆனால் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று முன் சோல் மியோங் தெரிவித்து உள்ளார்.

போலி நிறுவனங்கள் மூலம் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதாகவும் தடைகளை மீறி ஆடம்பரப் பொருட்களை விநியோகித்த கும்பலுக்கு உதவியதாகவும் அவர் மீது அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

மலேசியாவில் பத்து ஆண்டுகளுக்கு மேல் குடும்பத்துடன் 54 வயது முன் சோல் மியோங் வசித்து வருகிறார்.

வாஷிங்டன் அவரை நாடு கடத்த கோரிக்கை விடுத்ததால் கடந்த மே மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

"நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னை வருத்தமடையச் செய்துள்ளது," என்று அவரது வழக்கறிஞர் ஜக்ஜித் சிங் சொன்னார்.

இருந்தாலும் மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதால் தமது கட்சிக்காரரை உடடினயாக நாடு கடத்த வாய்ப்பில்லை என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.