டாக்சி ஓட்டுநரிடம் கொள்ளையடிக்க முயற்சி செய்த பயணி; தக்க சமயத்தில் உதவிய போலிசார்

டாக்சி ஓட்டுநரிடம் கொள்ளையடிக்க முயற்சி செய்த பயணி; தக்க சமயத்தில் உதவிய போலிசார்

1 mins read
332783e9-2dae-4c23-97cb-110c25269532
தக்க சமயத்தில் அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த இரண்டு போலிஸ்காரர்கள் காருக்குள் நடந்த போராட்டத்தைக் கண்டு காருக்கு அருகில் சென்றனர். படம்: மலேசிய ஊடகம் -

சுமார் 66 வயதான டாக்சி ஓட்டுநரிடமிருந்து கொள்ளையடிக்க முயன்றதாக 38 வயது ஆடவரை போலிசார் சாபாவின் சண்டக்கான் பகுதியில் கைது செய்தனர்.

கைதான ஆடவர் அந்த டாக்சியின் பயணி என்றும் சிபுகாவை நோக்கி கார் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் தோள் பையை அவர் பிடுங்கியதாகவும் கூறப்பட்டது.

காரை நிறுத்திவிட்டு தமது தோள் பையை அந்த ஆடவரிடமிருந்து மீட்கப் போராடினார் டாக்சி ஓட்டுநர்.

தக்க சமயத்தில் அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த இரண்டு போலிஸ்காரர்கள் காருக்குள் நடந்த போராட்டத்தைக் கண்டு காருக்கு அருகில் சென்றனர்.

போலிசாரைக் கண்டதும் தப்பி ஓட அந்த இளைய ஆடவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்தச் சம்பவத்தில் டாக்சி ஓட்டுநர் காயங்கள் ஏதுமின்றி தப்பினார்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்ததை சண்டக்கான் பகுதி போலிஸ் உயர் அதிகாரி முகமது அஸார் ஹமின் உறுதிசெய்தார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்