ராணுவத்தில் கூர்க்கா பெண்களைச் சேர்க்க பிரிட்டன் திட்டம்

ராணுவத்தில் கூர்க்கா பெண்களைச் சேர்க்க பிரிட்டன் திட்டம்

1 mins read
7d3a0736-d992-4168-9790-4d187b9631d4
போட்டியொன்றில் கூர்க்கா இளையர்கள் கூடையைச் சுமந்துகொண்டு ஓடு கின்றனர். சுமார் 48 நிமிடத்தில் இந்தப் போட்டியை அவர்கள் முடிக்க வேண்டும். லோட்டஸ் பயிற்சிக் கழகத்தைச் சேர்ந்த இவர்கள் பிரிட்டனிலும் சிங்கப்பூரிலும் பணியாற்ற கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு தயாராகின்றனர். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

லண்டன்: பிரிட்டிஷ் ராணுவத்தில் நேப்பாள நாட்டு குடிமக்கள் சேர்க்கப்படுவதை அனுமதிக்கும் ராணுவ உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு நேப்பாள அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளில் முதல் முறையாக நேப்பாளத்தி லிருந்து கூர்க்கா பெண்களையும் தமது நாட்டு ராணுவத்தில் சேர்க்க பிரிட்டிஷ் ராணுவம் திட்டமிட்டு உள்ளது. எத்தனை பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்பது பற்றி தகவல் இல்லை.

ஆனால் 2020ல் கூர்க்கா பெண்களுக்கான பயிற்சியை பிரிட்டிஷ் ராணுவம் தொடங்கும் என்று அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 1815ஆம் ஆண்டிலிருந்து நேப்பாள நாட்டைச் சேர்ந்த கூர்க்காக்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுவருகின்றனர்.

1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது புதுடெல்லிக்கும் லண்டனுக்கும் காட்மண்டுவுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம், இந்தியாவும் பிரிட்டனும் கூர்க்காக்களை ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள அனுமதியளிக் கிறது.