இந்திய மாநிலங்களில் அடங்காத வன்முறை: கல்வீச்சு, தீ வைப்பு, ஆறு பேர் உயிரிழப்பு

இந்தியாவில் புதிதாக திருத்தப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் போராட்டங்கள் சனிக்கிழமையும் தொடர்ந்தன.

போராட்டக்காரர்கள் ரயில்களுக்கும் ரயில் நிலையங்களுக்கும் தீ வைத்தனர். அசாம் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராடினர்.

அவர்களைக் கட்டுப்படுத்த போலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை ஆறு பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் நேற்று கூறினர்.

சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகள் பரவி சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதைத் தடுக்கும் பொருட்டு இன்று திங்கட்கிழமை வரை மாநிலம் முழுவதும் இணையச் சேவை தடை செய்யப்பட்டு இருக்கும் என்று அசாம் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சஞ்சய் கிருஷ்ணா கூறினார்.

மேற்கு வங்கத்திலும் ஏராளமானோர் ஒன்றுதிரண்டு வன்முறையில் ஈடுபட்டனர். மூன்று மாநில பேருந்துகள் உட்பட பதினைந்து பேருந்துகளில் பயணிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்றிய போராட்டக்காரர்கள் பின்னர் அவற்றுக்குத் தீ வைத்து தங்கள் எதிர்ப்பை உணர்த்தினர்.

முர்ஷிதாபாத் மாவட்டம் லால்கோலா ரயில் நிலையத்தில் பயணிகள் இன்றி நிறுத்தப்பட்டிருந்த ஐந்து ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன. அவை எரிந்து கருகின.

சனிக்கிழமை காலை ஹவுராவில் உள்ள சங்க்ரயில் ரயில் நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் நூற்றுக்கணக்கான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ரயில் நிலைய வளாகத்தின் ஒரு பகுதிக்கு அவர்கள் தீ வைத்தனர். வடக்கு-தெற்கு பகுதியை இணைக்கும் கோனா நெடுஞ்சாலையில் பேருந்துகளைப் பாதுகாக்க நிறுத்தப்பட்டு இருந்த காவலர்கள் மீது வன்முறைக் கும்பல் கல்வீசித் தாக்கியது. அவர்களை ஒடுக்க போலிசார் தடியடி நடத்தினர். நகரப் பகுதிகளுள் புகுந்த மர்மக் கும்பல் ஒன்று கடைகளுக்குத் தீ வைத்தது. தீப்பற்றி எரிவதைக் கண்டு கடைக்காரர்களும் வாடிக் கையாளர்களும் பதறியடித்து ஓடினர்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் உருவ பொம்மைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கொளுத்தி எதிர்ப்பு முழக்கமிட்டனர்.

இந்நிலையில், குடியுரிமைச் சட்டம் அமலுக்கு வந்த பின் முதன் முறையாக பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடகிழக்கு மாநிலங்களின் கவலையைப் போக்கும் வகையில், தேவைப்பட்டால் இந்தச் சட்டத் திருத்தத்திலேயே இன்னும் சில மாற்றங்களைச் செய்ய வாய்ப்புள்ளதாக் கூறியிருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!