பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் வேளையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் அந்த மோதலில் பலர் காயம் அடைந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் முக்கிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களைக் கலைக்க போலிசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதாகவும் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தியதாகவும் ஆர்ப்பாட்டத் தரப்பினர் கூறினர். பதிலுக்கு போலிசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசியதாகக் கூறப்பட்டது. நாட்டின் பொருளியல் சரிவர நிர்வகிக்கப்படவில்லை என்று கூறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அமைதியாக நடந்துவந்த ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை வன்முறை ஆர்ப்பாட்டமாக மாறிய நிலையில் அந்நாட்டு பிரதமர் பதவி விலகியுள்ளார்.
லெபனானில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
1 mins read

