பாரிஸ்: ஓய்வூதிய முறையை மறுசீரமைக்கக் கோரி பிரெஞ்சு போக்குவரத்து ஊழியர்கள் நேற்று 12வது நாளாகப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில மெட்ரோ ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டதால் பாரிசிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 630 கிலோமீட்டர் தொலைவுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேலை நிறுத்தம் முடிவுக்கு வராததற்குக் காரணமாக அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.
பிரான்ஸ்: 12வது நாளாக போராட்டம்
1 mins read

