அபுதாபிக்குச் செல்லும் விமானத்தைத் தகர்க்கத் திட்டமிட்ட இரு சகோதரர்களுக்கு மொத்தம் 76 ஆண்டு சிறை

அபுதாபிக்குச் செல்லும் விமானத்தைத் தகர்க்கத் திட்டமிட்ட இரு சகோதரர்களுக்கு மொத்தம் 76 ஆண்டு சிறை

1 mins read
fd3636bb-e8d6-4e8a-9957-24c8369d81f6
கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

சிட்னியிலிருந்து அபுதாபிக்குச் செல்லும் எட்டிஹாட் ஏர்வேஸ் விமானத்தை மாமிச அரைப்பானில் மறைத்து வைத்த வெடிகுண்டு ஒன்றின் மூலம் தகர்க்கத் திட்டமிட்ட சகோதரர்கள் இருவருக்கு மொத்தம் 76 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்தது.

இருவரில், காலித் கயாத்துக்கு 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2047ஆம் ஆண்டு வரை பரோலில் வெளியே செல்ல காலித்துக்கு அனுமதி இல்லை.

காலித்தின் சகோதரர் மஹ்மூட் கயாத்துக்கு 36 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2044ஆம் ஆண்டு வரை பரோலில் மஹ்மூத் வெளியே செல்ல வாய்ப்பில்லை.

2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் அபுதாபியை நோக்கிச் சென்ற விமானத்தில் வெடிகுண்டு, ரசாயன வாயு ஆகியவற்றைக் கொண்டு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர்.

சிட்னியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் காலித்தும் மஹ்மூட்டும் போலிசில் பிடிபட்டனர்.

விமானத்தைத் தாக்குவதற்காக அபாயகரமான வெடிபொருள்களைக் கொண்டு செய்யப்பட்ட வெடிகுண்டு துருக்கியிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். ஐஎஸ் அமைப்பின் வழிகாட்டுதலின்படி அவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்