பிலிப்பீன்ஸ் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்வு

பிலிப்பீன்ஸ் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்வு

1 mins read
1c29c346-bfe3-4bb9-af6c-2ccabc0f59d5
பிலிப்பீன்சின் டாவோ டெல்சர் மாநிலத்தின் படாடா நகரில் திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டடம் ஒன்றின் இடிபாடுகளில் இருந்து 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. படம்: ஏஎப்பி -

மணிலா: பிலிப்பீன்சில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்தது.ஏற்கெனவே சுவர் இடிந்து விழுந்து ஆறு வயது சிறுமியும் அதிர்ச்சியால் 70 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப் பட்ட நிலையில், திங்கட்கிழமை படாடா நகரில் இடிந்து விழுந்த கட்டடம் ஒன்றின் இடிபாடுகளில் இருந்து 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. 84 பேர் காயமடைந்துள்ளனர்.