கொழும்பு: இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது சாத்தியமற்றது என்று அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.
இலங்கையில் அனைத்து மக்களுக்கும் சம உரிமை என்பதே தனது நிலைப்பாடு என்று கூறிய அவர், அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல்மயமாக்கப்பட்ட விஷயம் என்றார்.
நாட்டில் மேம்பாடுகளை மேற்கொள்வதன் வழி, ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு முடியும் என்றும் அதற்கான நடவடிக்கைகளைத் தான் முன்னெடுத்துள்ளதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது கோத்தபய கூறினார். பெரும்பான்மையினரான சிங்களவர்களால் நிராகரிக்கப் படும் அதிகாரப் பகிர்வு, கூட்டாட்சி போன்றவற்றை வழங்குவது எப்படி என்று கேள்வி எழுப்பிய கோத்தபய, நாட்டைப் பிரித்து அதிகாரப் பகிர்வை வழங்குவதென்பது சாத்தியமற்ற ஒன்று என்றார்.