ஹாங்காங்: ஈரடுக்குப் பேருந்து ஒன்று மரத்தின் மீது மோதியதில் ஹாங்காங்கில் ஆறு பேர் உயிரி ழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். சீன எல்லைக்கு அருகில் உள்ள நியூ டெரிடரிஸ் வட்டாரத்தில் உள்ள கியு டுங் சாலை ஓரத்தில் நேற்று இவ்
விபத்து நிகழ்ந்தது. பேருந்தின் மேல் அடுக்கில் மாண்டவர்களின் சடலத்தை தீயணைப்பாளர்கள்
மீட்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
அந்தப் பகுதியில் தற்காலிக சடலக்கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. வேகமாக மோதியதன் விளைவாக பேருந்து உருக்குலைந்தது. விபத்து குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.