தோக்கியோ: கடந்த ஆண்டு புல்லட் ரயிலில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவருக்கு நேற்று தோக்கியோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அந்தத் தாக்குதலில் ஒருவர் மாண்டார்; இருவர் காயமுற்றனர்.
அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஜப்பான் தயாராகி வரும் நிலையில் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை இச்சம்பவம் ஏற்படுத்தியது. தோக்கியோவுக்கும் ஒசாகாவுக்கும் இடையில் சென்ற அதிவேக ரயிலில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதல் தொடர்பாக இச்சிரோ கோஜிமா, 23, என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.
விரக்தி காரணமாக தாம் அச்செயலைச் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.