ஓராண்டில் $35.2 மி. ஈட்டிய 8 வயது 'யூடியூப்' சிறுவன்

ஓராண்டில் $35.2 மி. ஈட்டிய 8 வயது 'யூடியூப்' சிறுவன்

1 mins read
694092af-feb0-4577-bf2a-9698567c3eee
கடந்த ஆண்டு யூடியூப் மூலம் $35.2 மில்லியன் வருமானம் ஈட்டி ரயன் காஜி என்ற எட்டு வயது அமெரிக்கச் சிறுவன் சாதனை படைத்துள்ளார். $24.4 மி. வருமானம் ஈட்டி, மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார் ஐந்து வயதான ரஷ்ய சிறுமி அனஸ்டாசியா ரட்ஸின்ஸ்கயா. படங்கள்: RYAN'S WORLD/FACEBOOK, SCREENGRAB FROM YOUTUBE -

காணொளி ஊடகமான 'யூடியூப்' மூலம் கடந்த ஆண்டில் அதிக வருமானம் ஈட்டியவர்களில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து இருக்கிறான் ரயன் காஜி என்ற எட்டு வயது அமெரிக்கச் சிறுவன்.

பொம்மைகளைத் திறந்து அவற்றின் செயல்முறை விளக்கத்தையும் அறிவியல் சோதனைகளையும் காணொளிகளாக வெளியிட்டு வரும் ரயன், கடந்த ஆண்டில் மட்டும் $35.2 மில்லியன் (26 மில்லியன் அமெரிக்க டாலர்) வருமானம் ஈட்டியுள்ளான். 2018லும் இவன் $30 மி. வருமானம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

இச்சிறுவனின் இயற்பெயர் ரயன் குவான். இவனுடைய பெற்றோர் 2015ஆம் ஆண்டில் 'ரயன்'ஸ் வோர்ல்ட்' என்ற பெயரில் யூடியூப் ஒளிவழியைத் தொடங்கினர். இந்த ஒளிவழி மூன்றே ஆண்டுகளில் 22.9 மி. சந்தாதாரர்களை ஈர்த்து இருக்கிறது.

இவரைப் போலவே, கடந்த ஆண்டு யூடியூப் மூலம் $24.4 மி. வருமானம் ஈட்டி, மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார் ஐந்து வயதான ரஷ்ய சிறுமி அனஸ்டாசியா ரட்ஸின்ஸ்கயா. குழந்தைகளுக்காக ஆறு யூடியூப் ஒளிவழிகளை இவர் நடத்தி வருகிறார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்