சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை உலுக்கி வரும் காட்டுத் தீ மோசமடைந்து சிட்னி நகரை நெருங்குவதே இதற்குக் காரணம்.
100க்கும் மேற்பட்ட இடங்களில் தீ கொழுந்துவிட்டு எரிவதாகவும் சிட்னிக்கு மிக அருகில் உள்ள மூன்று இடங்களில் பெரிய அளவிலான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாகவும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீயுடன் போராடிவரும் தீயணைப்புப் படையினர் பல இடங்களில் தீயை அணைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் ஆஸ்திரேலியாவில் தற்போது வெப்பம் அதிகமாக இருப்பதால் மேலும் பல இடங்களில் தீச்சம்பவம் நிகழக்கூடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரி வித்துள்ளனர்.