மலேசியாவில் உணவகத்துக்குள் புகுந்த கார்

மலேசியாவில் உணவகத்துக்குள் புகுந்த கார்

1 mins read
e2eb255e-f9fe-407f-b05e-e65a7c2f2c2f
இந்தச் சம்பவம் யுஇபி சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு உணவகத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. படம், காணொளி: எஸ்ஜே எக்கோ சமூக செய்தித்தாளின் இணையப்பக்கத்தின் ஃபேஸ்புக் -

ஓர் உணவகத்தில் பலர் உணவருந்திக்கொண்டிருந்தபோது கார் ஒன்று உணவகத்துக்குள் புகுந்ததைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை.

எஸ்ஜே எக்கோ எனும் சமூக செய்தித்தாளின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்தக் காணொளியை சுமார் 95,000 பேர் பார்த்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் யுஇபி சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு உணவகத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.

காரை ஓட்டி வந்த வயதான பெண்மணி 'பிரேக்'மீது கால் வைப்பதற்குப் பதிலாக 'ஆக்சலரேட்டர்' மீது தவறுதலாகக் காலை வைத்து விட்டதாக சுபாங் ஜெயா நகர மன்ற கவுன்சிலர் லீ ஜென் உயின் கூறினார்.

ஆனால், இந்தச் சம்பவம் குறித்து புகார் எதுவும் பெறப்படவில்லை என போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்