ஆள்கடத்தல் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ஈப்போ தம்பதி

ஆள்கடத்தல் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ஈப்போ தம்பதி

1 mins read
2e1b847d-8b32-410a-9b93-7d75c6884a8c
இந்தோனீசியப் பெண்ணை வேலைக்காக தன்னலத்துடன் பயன்படுத்திய சட்டப்பிரிவு 12ன் கீழ் வி.சந்துரு (ஜெயமலரின் கணவர்) மீது குற்றம் சாட்டப்பட்டது. என்எஸ்டி -

இல்லத்தரசி ஒருவர், அவரது கணவர் ஆகியோர் மீது இந்தோனீசியப் பெண் சம்பந்தப்பட்ட ஆள்கடத்தல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

32 வயதான இந்தோனீசியப் பெண்ணை வேலை செய்வதற்காக பலவந்தமாகக் கடத்தியதாக ஆள்கடத்தலுக்கு எதிரான சட்டப்பிரிவு 13, வெளிநாட்டினரைக் கடத்துவதற்கு எதிரான சட்டம் ஆகியவற்றின் கீழ் 36 வயதான ஜே.ஜெயமலர் எனும் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த இந்தோனீசியப் பெண்ணை வேலைக்காக தன்னலத்துடன் பயன்படுத்திய சட்டப்பிரிவு 12ன் கீழ் வி.சந்துரு (ஜெயமலரின் கணவர்) மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஈப்போவில் அமர்வு நீதிமன்ற நீதிபதி அஸ்மான் அபு ஹாசன் முன்பாக இவ்விருவர் மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டதையடுத்து இருவரும் தங்களது குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்.

தாமான் கிளிடாங் இமாசிலுள்ள ஒரு வீட்டில் 2011ஆம் ஆண்டுக்கும் இவ்வாண்டு அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தக் குற்றங்களை இவ்விருவரும் புரிந்ததாகக் கூறப்பட்டது.

இவ்விருவருக்கும் தலா 10,000 ரிங்கிட் மதிப்பில் பிணை வழங்கப்பட்டது.

இந்த வழக்கு அடுத்த மாதம் 20ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity