வாஷிங்டன்: ஈரான் மீதான நெருக்குதலை அதிகரிக்கும் வகையில், அமைதியான முறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை அடக்க வன்முறைகளை கையாண்டதாக ஈரானிய அதிகாரிகளின் விசாக்களைத் தடை செய்வதாகவும் ஈரானிய நீதிபதிகள் இருவர் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாகவும் அமெரிக்கா கூறியது. ஈரான் அரசாங்கம் கடந்த மாதம் பெட்ரோல் விலையை உயர்த்தியதால், நவம்பர் 15 அங்கு போராட்டங்கள் வெடித்தன. இதில் குறைந்தது 304 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
மேலும் உளவுபார்த்ததாகக் கூறி அமெரிக்கர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிபதிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு தண்டனை விதித்த நீதிபதி ஒருவர் மீதும் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.