ஹாங்காங்: ஹாங்காங்கில் ஆறு பயணிகள் கொல்லப்பட்டு, 39 பேர் காயமடைந்த விபத்தின் போது பேருந்து ஓட்டுநர் கவனமாக இல்லை என்று சந்தேகிக்கப்படுவதாக விசாரணைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆபத்தான முறையில் இரண்டு அடுக்கு பேருந்தை ஓட்டிச் சென்று, மரணத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள பேருந்தின் ஓட்டுநர், சம்பவம் நடந்த அன்று மூன்று வெவ்வேறு தடங்களில் ஓட்டிச் சென்றுள்ளார்.
கடந்த புதன்கிழமை மாலை 4.15 மணியளவில் ஷியுங் சுய் நகரில் சுங் பாக் லாங் அருகே ஃபேன்லிங் நெடுஞ்சாலையில் நடந்த விபத்திற்கான காரணம் குறித்து போலிசார் விசாரித்து வரும் நிலையில், தொடர்புடைய ஓட்டுநருக்கு வாகனம் ஓட்டுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.