மீனவர் வலையில் சிக்கிய பிரமோஸ் ஏவுகணையின் பாகம்

மீனவர் வலையில் சிக்கிய பிரமோஸ் ஏவுகணையின் பாகம்

1 mins read
1d347e40-0d2d-4102-9a4f-7f4fa5789844
-

கடலூர் அருகே கடலில் வீசிய வலையில் வியப்பூட்டும் வகையில் 100 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய பொருள் சிக்கியதைக் கண்டு அச்சமடைந்த மீனவர்கள் இதுகுறித்து போலிசாருக்குத் தகவல் கூறினர். விசாரணையில் இது பிரமோஸ் ஏவுகணையின் பாகம் என்று தெரியவந்தது. கடலூரை அடுத்த தாழங்குடாவைச் சேர்ந்த அறிவரசன் என்ற 40 வயது மீனவர், தனது நண்பர் ஐயப்பனுடன் பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார். மீன்களுக்காக வீசிய வலையில் பெரிய பந்து போன்ற பொருள் சிக்கியது. அதை கரைசேர்த்த மீனவர்கள், போலிசாருக்கும் தகவல் கூறினர். இதுகுறித்து 'இஸ்ரோ' இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவன அதிகாரிகள் வந்ததும் ஏவுகணை யின் பாகம் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் போலிசார் தெரிவித்தனர். படம்: ஊடகம்