இலங்கையின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலமான கதிர்காமத்தில் உள்ள செல்ல கதிர்காமம் கோயில் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. மாணிக்ககங்கை ஆற்றின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதால் ஆலயம் முழுமையாக நீரில் மூழ்கிவிட்டதாக செய்திகள் தெரிவித்தன. இதனால் கோயிலின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், கதிர்காமம் முருகன் கோயிலின் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இலங்கையின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழையினால் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளன. படம்: இணையம்
வெள்ளத்தில் இலங்கையின் செல்ல கதிர்காமம் கோயில்
1 mins read
படம்: இணையம் -

