சிபு: கழிவறையின் குழாய்க்குள் தமது வலது கை சிக்கிக்கொண்டதில் ஐந்து மணி நேரமாக அல்லாடினார் 74 வயது மூதாட்டி.
சரிகெய் பகுதியில் அமைந்துள்ள இங் டாய் ரோட்டில் வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்தது.
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கழிவறையில் தடுக்கி விழுந்ததால் அவரின் வலது கை அங்கிருந்த குழாயில் மாட்டிக்கொண்டது. மாலை ஐந்து மணியிலிருந்து மூதாட்டியைப் பார்க்காத அவரின் அண்டைவீட்டார், வீட்டைச் சோதித்துப் பார்த்ததில் கழிவறையில் மூதாட்டி இருந்த கதியைக் கண்டார்.
தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை அதிகாரிகள் உடனே மூதாட்டியின் வீட்டுக்கு வந்தனர். கழிவறையின் தரை ஓடுகளை உடைத்து மூதாட்டியின் கையை விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இதற்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பிடித்ததாகவும் கூறப்பட்டது.
மூதாட்டி தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.