யாழ்ப்பாணம்: சிறைச்சாலைக்கு முன் இருந்த சர்ச்சைக்குரிய ஐந்தடி சிலை, பொதுமக்களின் எதிர்ப்பால் நேற்று அகற்றப்பட்டது.
பொதுமக்களால் புத்தர் சிலை என்றும் சிறைச்சாலை அதிகாரி களால் சங்கமித்திரையின் சிலை என்றும் கூறப்படும் இச்சிலை பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சாலையில் பௌத்த சின்னங்கள் அமைக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவ்விடத்தில் நேற்று காலை யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கூடினர்.
அவர்களின் எதிர்ப்பால் சர்ச்சைக்குரிய சிலை அந்த இடத் திலிருந்து அகற்றப்பட்டது.