மெக்சிகோ: நங்கூரமிடுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்த ஓர் உல்லாசக் கப்பல் மற்றொரு உல்லாசக் கப்பலை உரசிச் சென்றதில் அறுவருக்குக் காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் மெக்சிகோவின் கொஸுமல் பகுதியில் நேற்று முன்தினம் காலை நடந்தது.
துறைமுகத்தை நோக்கி நகர்ந்து சென்றுகொண்டிருந்த ‘கார்னிவல் குலோரி’ உல்லாசக் கப்பல், ‘கார்னிவல் லெஜெண்ட்’ என்ற மற்றொரு உல்லாசக் கப்பலை உரசிச் சென்றதாக ‘கார்னிவல் குருஸ் லைன்’ நிறுவனம் தகவல் வெளியிட்டது.
இரு பிரம்மாண்ட கப்பல்கள் அருகருகே உரசிக்கொண்டு போகும் திகைப்பூட்டும் காட்சியைப் பல பயணிகள், காணொளியாகப் பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.
இதில் கப்பலில் இருந்த ஆறு பயணிகளுக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே கப்பல்களுக்கு ஏற்பட்ட சேதத்தை கப்பல் நிறுவனம் மதிப்பிட்டு வருகிறது.