லண்டன்: வரும் புதிய ஆண்டில் வெள்ளை மாளிகைக்கு வருகை அளி்க்குமாறு பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். திரு ஜான்சனின் அண்மைய தேர்தல் வெற்றியைத் தொடர்ந்்து திரு டிரம்ப் அவருக்கு இந்த அழைப்பு விடுத்திருப்பதாக நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திரு ஜான்சன் எப்போது அமெரிக்காவுக்கு வருகை அளிப்பார் என்பது குறித்து பேச்சு நடந்து வருவதாகத் தெரிகிறது. வரும் ஜனவரி மாத மத்தியில் அவர் அமெரிக்கா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.