போராளிகள் கடத்திய 2 இந்தோனீசியர்கள் மீட்பு

போராளிகள் கடத்திய 2 இந்தோனீசியர்கள் மீட்பு

1 mins read

மணிலா: பிலிப்பீன்சின் மிண்டானோ தீவுக்கருகே மலேசிய கடல் பகுதியில் அபு சாயஃப் போராளிகளால் கடந்த செப்டம்பர் மாதம் கடத்தப்பட்ட மூன்று இந்தோனீசியர்களில் இருவரை பிலிப்பீன்ஸ் பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். ஜோலோ தீவு மலைப்பகுதியில் பிலிப்பீன்ஸ் பாதுகாப்புப் படையினருக்கும் போராளிகளுக்கும் இடையே நேற்று நீடித்த 30 நிமிட துப்பாக்கிச் சண்டையின்போது ஒரு வீரரும் அபு சாயஃப் போராளி ஒருவரும் கொல்லப்பட்டதாக ராணுவத் தளபதி ஒருவர் கூறினார்். போராளிகளின் பிடியில் சிக்கியிருந்த இருவர், அந்த துப்பாக்கிச்சண்டையின்போது போராளிகளிடமிருந்து தப்பிச் சென்றதாவும் அவ்விருவரையும் பாதுகாப்புப் படையினர் காப்பாற்றியுள்ளதாகவும் ராணுவத் தளபதி கிரலிட்டோ சோபிஜானா கூறினார். போராளிகளிடம் சிக்கியிருந்த மற்றொருவர் தப்பிச் சென்றிருக்கலாம் அல்லது இன்னமும் போராளிகளிடம் சிக்கியிருக்காலம் என்று ராணுவத் தளபதி கூறியுள்ளார். அவரைக் காப்பாற்ற ராணுவம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சொன்னார்.