ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஹாங்காங் போலிசார் மோதல்

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஹாங்காங் போலிசார் மோதல்

1 mins read

ஹாங்காங்: சீனாவின் உய்கர் இனத்தவர்களுக்கு ஆதரவாக ஹாங்காங்கில் ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலிசார் மிளகு கரைசலை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து போலிசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களையும் போத்தல்களையும் வீசியதாக காவல் துறையினர் கூறினர். முதலில் அமைதியாகத் தொடங்கிய பேரணி இறுதியில் வன்முறை ஆர்ப்பாட்டமாக மாறியது. கூட்டத்தினரைக் கலைக்க போலிசார்் முயன்றனோது இரு தரப்பினருக்கும் இ்டையே மோதல் ஏற்பட்டது. நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1,000 பேர் கலந்துகொண்டதாகவும் அவர்களில் இளையர்களும் முதியவர்களும் அடங்குவர் என்றும் போலிசார் கூறினர். போலிசார் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முகமூடி அணிந்திருந்ததாகக் கூறப்பட்டது. ஹாங்காங்கில் ஏழாவது மாதமாக ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கின்றன. ஹாங்காங்கில் மனித உரிமைகளுக்காக ஜனநாயக ஆதரவு இயக்கத்தினர் போராடி வருகின்றனர்.