'பரிசுப்பொருள்' பலூன்களைப் பிடிக்கும் முயற்சியில் தள்ளுமுள்ளு; பலர் காயம்

'பரிசுப்பொருள்' பலூன்களைப் பிடிக்கும் முயற்சியில் தள்ளுமுள்ளு; பலர் காயம்

1 mins read
e5fd2743-5288-4d6c-9c89-617e9a438306
இரு பெரிய பைகளில் இருந்து பலூன்கள் பறக்கவிடப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 150 பேர் அதைப் பிடிப்பதற்காக முட்டிமோதிய போது பலர் கீழே விழுந்து மிதிபட்டதாகவும் கூறப்பட்டது. யூடியூப்பில் இருந்து எடுக்கப்பட்ட படம் -

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு கடைத்தொகுதியில் பரிசுப்பொருட்கள் அடங்கியிருந்த பலூன்களைப் பறக்கவிடப்பட, அதைப் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பலர் காயமுற்றனர். இரு பெரிய பைகளில் இருந்து பலூன்கள் பறக்கவிடப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 150 பேர் அதைப் பிடிப்பதற்காக முட்டிமோதிய போது பலர் கீழே விழுந்து மிதிபட்டதாகவும் கூறப்பட்டது. சிறிய அளவில் காயமடைந்த 12 பேருக்கு முதலுதவி அளித்ததாகவும் ஐவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.