யானைத் தந்தங்களைக் கடத்த முயற்சி

யானைத் தந்தங்களைக் கடத்த முயற்சி

1 mins read

ஹனோய்: மரப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டு, கப்பல் மூலம் நைஜீரியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட இரண்டு டன்னுக்கும் அதிகமான யானைத் தந்தங்களையும் 'பங்கோலின்' எனப்படும் எறும்புண்ணிகளின் செதில்களையும் வியட்னாம் அதிகாரிகள் கைப்பற்றினர். நைஜீரியாவில் இருந்து வந்த சரக்குக் கொள்கலன்களை ஹை போங் நகர அதிகாரிகள் சோதித்தபோது மூன்று கொள்கலன்களில் 330 கிலோ யானைத் தந்தங்களும் 1.7 டன் 'பங்கோலின்' செதில்களும் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.