காபூல்: போரின் காரணமாக நிலைகுலைந்திருக்கும் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட அங்கு சென்றுள்ள அமைதிக் குழுவைச் சேர்ந்த 26 பேரை தலிபான் பயங்கரவாதிகள் கடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிய மக்கள் தலிபானில் சேருவதைத் தடுக்கவும் தாக்குதல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவும் அமைதிக் குழுவினர் முயன்று வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் ஃபர்க் மாகாணத்தில் இருந்து 6 கார்கள் மூலம் அமைதிக் குழுவைச் சேர்ந்த 26 பேர் ஹிரட் மாகாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் சென்ற வாகனங்களை இடைமறித்த தலிபான் பயங்கரவாதிகள் அந்த 26 பேரையும் கடத்திச் சென்றனர். தலிபான் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றவர்களின் நிலை என்ன என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.