கொலராடோ: அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமையன்று வங்கி ஒன்றுக்குள் புகுந்த முதிய ஆடவர், ஆயுதத்தைக் காட்டி அங்குள்ள ஊழியர்களை மிரட்டி பணத்தைக் கொள்ளையடித்தார். அவர் என்ன ஆயுதம் வைத்திருந்தார் என்பதை போலிசார் தெரிவிக்கவில்லை. பணத்தைக் கொள்ளையடித்த பிறகு வங்கியைவிட்டு வெளியே வந்த அந்த ஆடவர் மிகுந்த உற்சாகத்துடன் அதை வீதியில் வீசினார். அவ்வழியே சென்றுகொண்டிருந்தவர்களுக்கு அவர் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
அதன் பின், அந்தப் பணத்தை உற்சாகமாக வீதியில் தூக்கி எறிந்து அங்கு சென்று கொண்டிருந்த மக்களுக்கு உற்சாகமாகக் கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். பிறகு அந்த பகுதியிலிருந்த ஸ்டார்பக்ஸ் காபிக்கடை அருகே கைது செய்யப்படுவதற்காக அவர் காத்திருந்தார். இந்த செயலில் ஈடுபட்ட 65 வயதான டேவின் வெயின் ஆலிவர் போலிசாரால் கைது செய்யப்பட்டார். ஆலிவர் வீதியில் வீசிய பணத்தை அவ்வழியாகச் சென்ற சிலர் வங்கியிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் ஆயிரக்கணக்கான டாலர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது.