இஸ்தான்புல்: துருக்கியில் கிட்டத்தட்ட 71 அகதிகளை ஏற்றிச்சென்ற படகு நேற்று கிழக்கு பிட்லிஸ் மாகாணத்தில் உள்ள வான் என்ற ஏரியில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.
இதன் விளைவாக படகில் பயணம் சென்ற 7 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
படகு கவிழ்ந்த தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் ஐந்து பேர் மாண்டனர். சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
ஏரியில் விழுந்த ஏறத்தாழ 64 பேரை மீட்புப் பணியாளர்கள் மீட்டதாக துருக்கி ஊடகம் தெரிவித்தது.
கவிழ்ந்த படகில் இருந்தவர்கள் அனைவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து துருக்கிக்கு அகதிகளாக வந்தவர்கள் என்று துருக்கி நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.