ஸ்பெயின் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த தந்தையும் இரு பிள்ளைகளும்

ஸ்பெயின் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த தந்தையும் இரு பிள்ளைகளும்

1 mins read

லண்டன்: கிறிஸ்மஸ் விடுமுறையின்போது ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு குடு்ம்பத்திற்கு எதிர்பாராத துயரச் சம்பவம் நடந்தது. பிரிட்டனைச் சேர்ந்த கேப்ரில் டியா தன் மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்குள்ள லா கோஸ்டா வேல்டு விடுதியில் தங்கியிருந்த அவர்கள் கிறிஸ்மஸ் முதல் நாள் அங்குள்ள நீச்சல் குளத்திற்கு நீந்தச் சென்றனர். அந்த நீச்சல் குளத்திற்குள் இறங்கிய தங்கள் மகளும் (9 வயது) மகனும் ((16வயது) நீரின் ஆழமான பகுதிக்கு இழத்துச்செல்லப்பட்டதாகவும் அவர்களுக்கு உதவச் சென்ற தன் கணவரும் திரும்பிவரவில்லை என்றும் திருமதி கேப்ரில் கூறினார். அந்த மூவருக்கும் நீச்சல் தெரியாததால் அவர் நீச்சல்குளத்தில் மூழ்கி இறந்துவிட்டதாகக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார். அவர்களுக்கு நன்றாக நீந்தத் தெரியும் என்றும் அந்த நீச்சல் குளத்தில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும் என்றும் அந்த மாது கூறியுள்ளார்.