பெய்ஜிங்: நூற்றுக்கணக்கானோரின் உயிர்களைப் பறித்த ‘சார்ஸ்’ கிருமிக்குத் தொடர்புடைய நிமோனியா நோய் தலைகாட்டியுள்ள நிலையில் சீனா விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ‘சிசிடிவி’ நேற்று தெரிவித்தது.
சீனாவின் ‘வூஹான்’ பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு வந்த பல நோயாளிகளிடம் ‘நிமோனியா’ நோய் தொடர்பான அறிகுறிகள் காணப்பட்டதாக நேற்று முன்தினம் கிடைத்த அவசரத் தகவலை அடுத்து அப்பகுதிக்கு நேற்று தேசிய சுகாதார ஆணையத்தைச் சேர்ந்த நிபுணர்க் குழு அனுப்பப்பட்டது.
மருத்துவமனைக்கு வந்த 27 பேரில் எழுவர் கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.