ஜார்ஜ் டவுன்: பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தின் பின்னால் மூண்ட தீ நேற்று பயணிகளையும் சமூக ஊடகத்தினரையும் குழப்பத்தில் மூழ்கடித்தது. பிற்பகல் 1.20 மணிவாக்கில் அடர்த்தியான புகை எழுந்ததைத் தொடர்ந்து விமான நிலையத்தின் தீயணைப்பு வாகனம் விரைந்து சென்றது. நல்லவேளையாக, விமான நிலையத்தில் தீ பிடிக்கவில்லை என்றும் அந்தப் புகை விமான நிலையத்திற்குப் பின்னால் சற்று தொலையில் மூண்ட புதர்த்தீயால் உருவானது என்றும் பின்னர் தெரிய வந்ததாக தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது. இந்த திடீர் புகையால் எந்தவொரு விமானப் பயணமும் தாமதமடையவில்லை என்றும் விமான நிலைய வேலியோரம் பற்றி எரிந்த தீயை தீயணைப்பாளர்கள் அணைத்துவிட்டார்கள் என்றும் மலேசிய விமான நிலைய நிறுவனத்தின் மூத்த மேலாளர் முகம்மது நட்ஜிம் கூறினார்.
பினாங்கு விமானப் பயணிகளைப் பதறவைத்த திடீர் புகை
1 mins read
பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தின் பின்னால் மூண்ட தீ நேற்று பயணிகளையும் சமூக ஊடகத்தினரையும் குழப்பத்தில் மூழ்கடித்தது. படம்: ஊடகம் -

