விமானத்தின் இயந்திரத்தில் 'அதிர்ஷ்ட' நாணயங்களைப் போட்டார்

விமானத்தின் இயந்திரத்தில் 'அதிர்ஷ்ட' நாணயங்களைப் போட்டார்

1 mins read

பெய்ஜிங்: முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்த ஆடவர் ஒருவர், விமானத்தின் இயந்திரத்தில் 'அதிர்ஷ்ட' நாணயங்களைப் போட்டார். இயந்திரத்திற்கு அருகே நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதும் விமானம் உடனடியாகத் தரையிறக்கப்பட்டு, பின்னர் பயணமே ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், கிழக்கு சீனாவில் உள்ள அங்சிங் டியன்ஸுஷனில் இருந்து கிளம்பிய 'லக்கி ஏர்' விமானம் ஒன்றில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதற்காக கடந்த ஜூலை மாதமே லூ சாவ் என்ற அந்த ஆடவர் நீதிமன்றத்தில் முன்னிலையானபோதும் இப்போது தான் அவ்விவரம் அம்பலப்படுத்தப்பட்டது. ஒரு யுவான் நாணயங்கள் இரண்டை இயந்திரத்தினுள் போட்டதை ஒப்புக்கொண்ட லூ சாவ், தமது செயலுக்காக பத்து நாள் போலிஸ் தடுப்புக்காவலிலும் இருந்துள்ளார். அத்துடன், அவருக்கு 17,200 அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப் பட்டது.