விமானம் விழுந்து நொறுங்கி இலங்கை விமானப் படையினர் நால்வர் மரணம்

விமானம் விழுந்து நொறுங்கி இலங்கை விமானப் படையினர் நால்வர் மரணம்

1 mins read

கொழும்பு: இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான 'ஒய்12' ரக விமானம், ஹப்புத்தளை பகுதியில் நேற்றுக் காலை 9.15 மணியளவில் விழுந்து நொறுங்கியது. இதில், அந்த விமானத்தில் பயணம் செய்த விமானப் படை வீரர்கள் மாண்டுவிட்டதாகக் கூறப்பட்டது. அத்துடன், விபத்தின்போது அருகில் இருந்த வீட்டில் வசித்த பெண் ஒருவர் காயம் அடைந்ததாகவும் அவர் ஹப்புத்தளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.