கம்போடியாவில் கட்டடம் சரிவு: பலி எண்ணிக்கை 29ஆக உயர்வு

கம்போடியாவில் கட்டடம் சரிவு: பலி எண்ணிக்கை 29ஆக உயர்வு

1 mins read
697997cc-2b56-4657-a486-fd079d43b473
கம்போடியாவில் 7 மாடிக் கட்டடம் ஒன்று சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினர். கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் நடவடிக்கை தொடர்கிறது. படம்: இபிஏ-இஎப்இ -

நோம்பென்: கம்போடியாவில் 7 மாடிக் கட்டடம் ஒன்று சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினர். இறந்தவர்களில் ஐந்து சிறுவர்களும் அடங்குவர். கடலோர கெப் மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த 7 மாடி ஹோட்டல் கட்டடம் வெள்ளிக்கிழமை சரிந்துவிழுந்தது. கட்டட இடிபாடுகளில் இன்னும் 30 பேர் சிக்கியிருப்பதாக ஆரம்பத்தில் அதிகாரிகள் மதிப்பிட்டனர். ஆனால் இடிபாடுகளில் சிக்கி காயமுற்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாக மாநில பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். மீட்புக் குழுவினர் 23 பேரை காப்பாற்றி உள்ளனர். மீட்புப் பணி தீவிரம் அடைந்துள்ளது.