லாகூர்: பாகிஸ்தான் நாட்டில் உள்ள நன்கானா சாகிப் குருத்வாரா மீதும் அங்கு சென்ற சீக்கியர்கள் மீதும் கடந்த 3ஆம் தேதி மர்மநபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து மேற்கொள்ளப் பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமான இம்ரான் என்பவரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது.
இதற்கிடையே, பாகிஸ் தானின் பெஷாவர் நகரில் உள்ள சம்கனி போலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், 25 வயது பர்விந்தர் சிங் எனும் சீக்கிய இளைஞர் பிணமாக நேற்று கண்டெடுக்கப்பட்டார்.
அவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலிசார் கூறுகின்றனர்.