பிரிட்டனில் பல ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்த இந்தோனீசிய மாணவருக்கு ஆயுள் சிறை

பிரிட்டனில் பல ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்த இந்தோனீசிய மாணவருக்கு ஆயுள் சிறை

2 mins read
5018f954-58f7-4f62-829a-2bf5131bd4ee
மயக்கமுற்ற ஆடவர்களுடன் அவர் பாலியல் உறவு கொள்வதைச் சில சமயங்களில் சினாகா தமது கைபேசியில் பதிவு செய்தார். படம்: ஏஎஃப்பி -

பிரிட்டனின் ஆக மோசமான பாலியல் வன்கொடுமையாளருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சிறையிலிருந்து பரோலில் வெளிவருவதானாலும் அதும் 30 ஆண்டுகளுக்குப் பிறகுதான் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தோனீசிய மாணவரான 36 வயது ரேன்ஹாட் சினாகா ஆடவர்கள் பலரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக நீதிமன்றமத்தில் தெரிவிக்கப்பட்டது. மான்செஸ்டர் நகரில் உள்ள மதுபானக்கூடங்களுக்கு வெளியில் நின்றுகொண்டிருந்த ஆடவர்களை அணுகி அவர்களைத் தமது வீட்டிற்கு அழைத்துச் சென்றார் சினாகா.

வீட்டை அடைந்ததும் அந்த ஆடவர்களுக்குத் தெரியாமல் சினாகா அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்கள் மயங்கியதும் அவர்களைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மயக்கமுற்ற ஆடவர்களுடன் அவர் பாலியல் உறவு கொள்வதைச் சில சமயங்களில் சினாகா தமது கைபேசியில் பதிவு செய்தார். ஒருமுறை அவர் மயக்கமுற்ற ஆடவரைப் பாலியல் பலாத்காரம் செய்துகொண்டிருந்தபோது அந்த நபருக்குத் திடீரென்று சுயநினைவு திரும்பியது. அதனை அடுத்து சினாகா மாட்டிக்கொண்டார்.

48 ஆடவர் மீது 159 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் நிரூபணமானாலும் அவரால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் என்று பிரிட்டன் ஊடகங்கள் தெரிவித்தன.

தங்க இடம் தரும் நல்லவர் என நம்பி சினாகாவுடன் இந்த ஆடவர்கள் சென்றனர். பார்ப்பதற்குச் சாதுவாக இருக்கும் சினாகா அவர்களை நம்பவைத்து ஏமாற்றியுள்ளார். தமது காம இச்சைக்காக சினாகா அந்த ஆடவர்களைப் பயன்படுத்திக்கொண்டார். சினாகா மனசாட்சி இல்லாத காம வெறியன்," என்று நீதிபதி சுசேன் கோடார்ட் தீர்ப்பளிக்கும்போது தெரிவித்தார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity