பழிவாங்கிய ஈரான்; அமெரிக்க படைகள் மீது தாக்குதல்

அமெரிக்காவைப் பழிவாங்கப் போவதாக மிரட்டியிருந்த ஈரான் நேற்று அதனை செயலில் காட்டியது.

ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது அது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

ஈராக்கில் பயணம் சென்றுகொண்டிருந்த ஈரானிய புரட்சிப் படைத் தளபதி காசிம் சுலைமானியை வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தி கொன்றதால் அமெரிக்காவைப் பழிவாங்கப் போவதாக ஈரான் சூளுரைத்தது.

அதன்படியே அமெரிக்க படைகள் மீது ஈரான் நேற்று ஏவுகணைகளைப் பாய்ச்சியது.

ஈரானிலிருந்து உள்ளூர் நேரப்படி விடியற்காலை 1.30 மணியளவில் ஈராக்கிய ராணுவத் தளங்களில் உள்ள அமெரிக்க தலைமையிலான கூட்டுப் படைகள் மீது குைறந்தது 12 ஏவகணைகள் பாய்ச்சப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன. கடந்த வாரம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஜெனரல் காசிம் சுலைமான் கொல்லப்பட்டதால் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல் நடைபெற்றதாக ஈரானின் புரட்சிப் படையை மேற்கோள்காட்டி ஈரானிய தொலைக்காட்சி குறிப்பிட்டது.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 80 ‘அமெரிக்க பயங்கர வாதிகள்’ கொல்லப்பட்டதாகவும் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை இலக்காக வைத்து 15 ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாக வும் அது சொன்னது.

ஓர் ஏவுகணைகூட வழி மறிக்கப்படவில்லை என்று அது கூறியது.

அமெரிக்கா ஒருவேளை இதற்குப் பதிலடி கொடுத்தால் அதே வட்டாரத்தில் உள்ள நூறு இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரானிய புரட்சிப் படை எச்சரித்துள்ளது.

ஈரானின் தாக்குதலில் அமெரிக்காவின் ஹெலிகாப்டர்களும் ராணுவச் சாதனங்களும் மோசமான அளவுக்கு சேதமடைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

இதற்கிடையே அமெரிக்கப் படைகள் தாக்கப்பட்ட சில மணி நேரத்தில் பேசிய ஈரானிய அரசாங்கப் பேச்சாளர் ஒருவர், “ஈரான் போரை விரும்பவில்லை, ஆனால் எங்களை தாக்கினால் பதில் தாக்குதல் நடத்துவோம்,” என்றார்.

“புரட்சிப்படை நடத்திய வெற்றி கரமான தாக்குதலுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்குப் போர் வேண்டாம். அதே சமயத்தில் எந்தவிதத் தாக்குதலுக்கும் பதிலடி தர தயாராக இருக்கிறோம்,” என்று டுவிட்டர் பதிவில் அலி ரபியி தெரிவித்தார்.

ஈரானிய தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்து அெமரிக்க தற்காப்புப் படை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

“தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு வருகிறோம்,” என்று மட்டும் அமெரிக்க தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் ஜோனதன் ஹோஃப்மேன் குறிப்பிட்டார்.

ஈராக்கில் உள்ள அல்-ஆசாத் விமானப் படைத் தளமும் எர்பில் ராணுவத் தளமும் தாக்குதலுக்கு உள்ளாகியதாக அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!