'என் மகனுக்கு சரியான தண்டனை கிடைத்துள்ளது'

'என் மகனுக்கு சரியான தண்டனை கிடைத்துள்ளது'

1 mins read
d1a2a061-d5bf-4a4c-9162-6c0a448a0c98
தந்தை சைபுன் சனாகா மற்றும் தாய் நார்மாவதியுடன் தண்டனை விதிக்கப்பட்ட ரேன்ஹாட் சினாகா (நடுவில்). கோப்பு படம்: இணையம் -

ஜகார்த்தா: தன் மகன் ரேன்ஹாட் சினாகாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனை சரியானதுதான் என்று கூறியுள்ளார் அவரது தந்தை சைபுன் சினாகா.

பிரிட்டனின் ஆக மோசமான பாலியல் வன்கொடுமையாளரான இந்தோனீசியரான 36 வயது ரேன்ஹாட் சினாகாவிற்கு அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததையடுத்து அவர் தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.

"தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அவன் செய்த குற்றங்களுக்கான தண்டனை சரியானது. இதைப் பற்றி நான் வேறு எதுவும் பேச விரும்பவில்லை," என்று இந்தோனீசிய பிபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியின் போது சைபுன் சினாகா தெரிவித்தார்.

கடந்த 2007ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு மாணவராக குடிபெயர்ந்தது முதல் இவர் சுமார் 195 ஆடவர்களை பாலியல் வன்கொடுமை அல்லது துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பெரும் தொழிலதிபரான தந்தை அனுப்பிய பணத்தில் படித்து

வந்த ரேன்ஹாட், மான்செஸ்டரில் ஓரினச் சேர்க்கையாளர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் தங்கியிருந்தார்.

மதுபானக்கூடங்களுக்கு வெளியே இருந்த ஆடவர்களுக்கு உதவுவது போல் பேசி, அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.