காங்கோ: தட்டம்மைக்கு 6,000 பேர் பலி

காங்கோ: தட்டம்மைக்கு 6,000 பேர் பலி

1 mins read
061e96fc-8741-47c2-805f-9f1435471e41
காங்கோ அரசாங்கமும் உலக சுகாதார அமைப்பும் கடந்த செப்டம்பரில் அவசரகால தடுப்பூசி திட்டத்தை தொடங்கின. படம்: யூனிசெப் -

காங்கோவில் தட்டம்மை தொற்றுநோயால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தைக் கடந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சுமார் 310,000 தட்டம்மை தொற்று பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

காங்கோ அரசாங்கமும் உலக சுகாதார அமைப்பும் கடந்த செப்டம்பரில் அவசரகால தடுப்பூசி திட்டத்தை தொடங்கின.

கடந்த ஆண்டில் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 18 மில்லியன் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஆனால் மோசமான உள்கட்டமைப்பு, சுகாதார நிலையங்கள் மீதான தாக்குதல்கள், மருத்துவ பரிசோதனைக்கு தொடர்ந்து செல்லமுடியாத நிலை ஆகியவை நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளுக்குத் தடையாக உள்ளன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தட்டம்மை வேகமாக பரவுவதாக கூறப்பட்டதிலிருந்து நாட்டின் 26 மாகாணங்களிலும் தட்டம்மை நோய்கள் பதிவாகியுள்ளன.

எபோலா தொற்றிலும் இரண்டாவது மிக மோசமான நாடாக இருக்கிறது காங்கோ. ஆனால் இது தட்டம்மை நோயைக் காட்டிலும் பாதிக்கும் குறைவானவர்களைப் பலி வாங்கியுள்ளது.

ஆறு முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசியை நீட்டிக்கவும் தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரவும் $40 மில்லியன் தேவை என்கிறது உலக சுகாதார அமைப்பு.