சோமாலியா: கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நடந்த குண்டுவெடிப்பில் இருவர் பலியாகினர், 11 பேர் படுகாயமடைந்தனர்.
அந்நாட்டின் தலைநகர் மொகடிஷூவில் உள்ள நாடாளுமன்றம் அருகே அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம் நேற்று இந்த தற்கொலைத் தாக்குதலை நடத்தி உள்ளது.
நாடாளுமன்றம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டன. அப்போது, காரில் வெடிகுண்டுகளை ஏற்றி வந்திருந்த, பயங்கரவாதி ஒருவன் திடீரென வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான்.
இதனால் அந்த கார் வெடித்துச் சிதறியது. அருகில் இருந்த வாகனங்களும் தூக்கி வீசப்பட்டு தீப்பிடித்தன. இந்த தாக்குதலில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கடந்த வாரம் மொகாடிஷூவில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

