'தென்சீனக் கடலில் சீனக் கப்பல்கள்; அனைத்துலக சட்ட மீறல்'

'தென்சீனக் கடலில் சீனக் கப்பல்கள்; அனைத்துலக சட்ட மீறல்'

1 mins read
8e99cf6f-9bf6-48d2-9860-db56bde243b5
மலேசியாவிற்கும் போர்னியோவிற்கும் இடையில் உள்ள மீன்பிடி நீர் தொடர்பாக சீனாவுடனான பதற்றங்களுக்கு மத்தியில் நத்துனா தீவுக்கு வருகையளித்த இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ (வலது), அங்கு கடற்துறை விவகாரம், மீன்வளத்துறை அமைச்சுகளின் அதிகாரிகளைச் சந்தித்து உரையாடினார். படம்: பிபிபி, லைலி ரச்சீவ் -

ஜகார்த்தா: மலேசியாவிற்கும் போர்னியோவிற்கும் இடையில் உள்ள மீன்பிடி நீர் தொடர்பாக சீனாவுடனான பதற்றங்களுக்கு மத்தியில் இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ நத்துனா தீவை பார்வையிட சென்றார்.

இந்தோனீசிய கடற்பகுதிக்குள் சீன கப்பல்கள் நுழைந்ததையடுத்து, இந்தோனீசியாவும் போர் கப்பல்களையும் மீன்பிடி படகுகளையும் அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.

டிசம்பர் முதல் சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் சீனக் கப்பல்கள் அதிகரித்திருப்பது அனைத்துலக சட்டத்தை மீறுவதாக உள்ளது என்றார் ஜோக்கோவி.

அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், "நமது இறையாண்மை என்று வரும்போது எந்த பேச்சுவார்த்தைக்கு இடமிருக்காது," என்றார்.