கடும் பனியில் தனித்து விடப்பட்ட 7 மாத குழந்தை உயிரிழப்பு

கடும் பனியில் தனித்து விடப்பட்ட 7 மாத குழந்தை உயிரிழப்பு

1 mins read
ef3c39ad-4a91-4502-84a6-e525c160fa54
பனிபடர்ந்த கிழக்கு ஹபார்வ்ஸ்க் வட்டாரம். படம்: இணையம் -

கடும் பனியில் வீட்டு பால்கனியில் தனித்து விடப்பட்ட 7 மாத குழந்தை குளிரில் உறைந்து உயிரிழந்தது.

கிழக்கு ஹபார்வ்ஸ்க் வட்டாரத்தில் -7 டிகிரி செல்ஸியஸ் குளிரில், 7 மாத குழந்தையை, 5 மணிநேரத்திற்கு பால்கனியில் தனியே விட்டு சென்ற பெற்றோர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை வெளிக்காற்றை சுவாசிக்க ஏதுவாக வீட்டில் உள்ள பால்கனியில் குழந்தையை அதன் சிறிய தள்ளுவண்டியில் பெற்றோர் அமரவைத்ததாகக் கூறப்பட்டது.

மேலும், அதிகமான குளிரால் உடலின் வெப்பநிலை குறைந்து குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, அந்த வட்டாரத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் , "இங்கு நிலவும் கடும் குளிரில் யாரையும் தனியே விடுவது ஆபத்து. அதிலும் குழந்தைகள் விரைவில் பாதிக்கப்படுவார்கள், அதனால் எப்போதும் குழந்தைகள் கண்காணிக்கப்பட வேண்டும்," என்று் கூறியுள்ளார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity