ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ கட்டுக்கடங்கா வகையில் பெரிய அளவில் பற்றி எரியும் அபாயம் உள்ளதாக ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது.
விக்டோரியா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருந்தாலும்கூட, புதிதாக உருவெடுக்கும் காட்டுத் தீயால் அவர்கள் பாதிக்கப்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபத்தான வட்டாரங்களில் குடியிருக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மக்களுக்கு ஆஸ்திரேலிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

