நிர்வாணப் படம் அனுப்பி ஆஸ்திரேலியாவுக்காக நிதி திரட்டும் அழகி

நிர்வாணப் படம் அனுப்பி ஆஸ்திரேலியாவுக்காக நிதி திரட்டும் அழகி

1 mins read
ea804224-0f45-49f7-89d9-5674768e2cd2
கேலன் வார்டின் டுவிட்டர் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட அவரது படம். -

கட்டுக்கடங்காத காட்டுத் தீ ஆஸ்திரேலியாவில் இதுவரை 24 உயிர்களைப் பறித்துள்ளது; 1,400க்கு மேற்பட்ட வீடுகளை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது.

இத்தகைய செய்திகளால் மிகவும் மனம் வருந்திய அமெரிக்க நிர்வாணப் பட அழகி கேலன் வார்ட், பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய மக்களுக்கு உதவும் நோக்கில் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அதற்காக அவர் விடுத்துள்ள அறிவிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

டுவிட்டரிலும் இன்ஸ்டகிராமிலும் பல்லாயிரம் பேர் தம்மைப் பின்தொடரும் நிலையில், ஆஸ்திரேலிய நிவாரணப் பணிகளுக்காக பத்து டாலர் தருவோருக்குத் தன்னுடைய நிர்வாணப் படம் ஒன்றை அனுப்பிவைப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

இதுவரை ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் திரட்டிவிட்டதாகவும் கூறியுள்ளார் அழகி கேலன்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity