மலேசியாவின் சுங்கை பூலோவிற்கு அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் நேற்று இரவு இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
31 வயது ஆடவர் ஓட்டிச் சென்ற புரோட்டான் சாட்ரியா கார் கோளாறு காரணமாக சாலையில் திடீரென நின்றது.
அதன் பின்னால் வந்த மிட்சுபிஷி ஏஎஸ்எக்ஸ் காரின் ஓட்டுநர் சரியான நேரத்தில் தனது காரை நிறுத்த முடியாததால் முன்னால் நின்றுகொண்டிருந்த காரின் மீது மோதியது.
அந்த மோதலின் தாக்கத்தால், நிறுத்தப்பட்ட காரிலிருந்து ஒன்பது மாதக் குழந்தையும் அவரது 25 வயது தாயாரும் வெளியில் தூக்க வீசப்பட்டனர்.
அதே காரில் பயணம் செய்த வேறு இரண்டு பெண்களும் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர். குழந்தை உட்பட இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்த மோசமான விபத்தில் தன்னுடைய பாட்டி, தாயார், மனைவி, மகள் என நான்கு உறவுகளை 31 வயது ஓட்டுநர் பறிகொடுத்ததாக தி ஸ்டார் குறிப்பிட்டது. அவரும் காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது காரின் மீது மோதிய எஸ்யுவி காரின் ஓட்டுநரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

