சீனா-அமெரிக்கா ஒப்பந்தம் 15ஆம் தேதிக்குப் பின் கையெழுத்தாகும்

சீனா-அமெரிக்கா ஒப்பந்தம் 15ஆம் தேதிக்குப் பின் கையெழுத்தாகும்

1 mins read

வாஷிங்டன்: அமெரிக்காவும் சீனாவும் இம்மாதம் 15ஆம் தேதி முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது சற்று தள்ளிப் போகலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவின் உயர்மட்டப் பேராளர்களுடன் தாம் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாக் கூறிய டிரம்ப், அதன்பின் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்காக பெய்ஜிங் செல்லவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.