நிலவுக்குச் செல்ல துணை தேடும் ஜப்பான் கோடீஸ்வரர்

டோக்கியோ: நிலவுக்கு செல்லவிருக்கு ஜப்பானிய கோடீஸ்வரரான யூசாகு மெஸாவா, வழித் துணைக்கு ஒரு துணை தேவை என்று இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார்.

44 வயது தொழிலதிபரான யூசாகு நிலவுக்குச் செல்லும் முதல் சுற்றுப்பயணி என்ற பெருமையை பெறவுள்ளார்.

வரும் 2023ல் நிலவுக்குச் செல்ல தயாராகி வரும் இவர், அந்த பயணத்தை முழுமையாக அனுபவிக்க விரும்புவதாகவும் எனவே தன்னுடன் வர 20 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் விண்ணப்பங்களை அனுப்புமாறும் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்.

வரும் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அனுப்புமாறும் மார்ச் மாத கடைசியில் தனது முடிவைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவர் செல்லவிருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் சுற்றுலா ராக்கெட், நிலவில் இறங்காமல் அதைச் சுற்றி வட்டமிட்டு பின் திரும்பும் என்று கூறப்படுகிறது.

இம்மாத தொடக்கத்தில் தனது டுவிட்டை மறுடுவீட் செய்யும் 100 பேருக்கு 100 மில்லியன் யென் தருவதாக வாக்களித்திருந்த இவர், அதன்படி கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!